எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

எல். வஸீம் அக்ரம் (படிகள் பதிப்பகம்)




பிறப்பு - 1985.12.06
கல்வி - அநுராதபுரம் துருக்கராகம மு.வி, ஸாஹிரா .வி.
பட்டம் - கலைமாணி (தென்கிழக்குப் பல்கலைக்கழகம்)
துறை - கவிதை, கட்டுரை, வானொலி நாடகம், சினிமா, திறனாய்வு, சிறுகதை
ஊடகங்கள் - படிகள், மல்லிகை, ஞானம், கலைமுகம், ஜீவநதி, செங்கதிர், தாயகம், எதுவரை, எங்கள்தேசம், மீள்பார்வை, தினகரன், மறுபாதி, தினக்குரல், வீரகேசரி, மரங்கொத்தி, தினமுரசு, உள்ளிட்ட பல செய்தி இதழ்கள், இணையங்கள்
பணிகள் - பிரதான ஆசிரியர் - படிகள் (பதிப்பகம்), எழுதுகோல். வெள்ளிச் சிறகு, துணையாசிரியர் - மரங்கொத்தி, களவெட்டி, நிஷ்டை
ஏனைய துறைப் பணிகள் - செயலாளர் - மாணவர் பேரவை, தென்கிழக்குப் பல்கலைக்கழகம் (2007-08), ஜூம்மா மஸ்ஜித் துருக்கராகம.
தொழில் - அபிவிருத்தி உத்தியோகத்தர் (பொருளாதார அபிவிருத்தி அமைச்சு)
நூல்கள் - மண்ணில் துழாவும் மனது (கவிதை 2007), ஆக்கிரமிப்பின் கால்தடம் (கவிதை 2009)
நேர்காணல்கள் - நேத்ரா, வசந்தம் தொலைக்காட்சிகள்
விருதுகள் - இனிய மனா இலக்கிய இதழியல் விருது 2010, உலக தமிழ்ச் சிற்றிதழ் சங்கம்
ஆய்வு - அநுராதபுர மாவட்ட தமிழ்க் கவிதை தொடர்பான வாசிப்பு, கொழும்பு தமிழ்ச் சங்கம் 2013

வெள்ளி, 31 மே, 2013

எல். வஸீம் அக்ரம் அவர்களுக்கு கௌரவம்

ஈழத்துத் தமிழ் இலக்கியச் செல்நெறியும் பிரதேச இலக்கியங்களும் “ என்ற தலைப்பிலான இருநாள் ஆய்வரங்கு 2013.05.18 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ‘சங்கரப்பிள்ளை மண்டபத்தில் ’நடந்தது.

இந்நிகழ்வில் “அநுராதபுர மாவட்ட பிரதேச கவிதை அடையாளம் பற்றிய ஒரு வாசிப்பு” என்ற ஆய்வை சமர்ப்பித்த மைக்காக வஸீம் அக்ரம் அவர்களுக்கு தமிழ்ச் சங்க உறுப்பினர்களால் அளிக்கபட்ட சின்னத்துடன் காட்சி தருகின்றார். 

அருகில் ஆய்வரங்கில் கலந்துகொணடவர் பேராசிரியரகள் மற்றும் ஆய்வாளர்களைக் காணலாம்

அநுராதபுர மாவட்ட பிரதேச அடையாளக் கவிதைகள் பற்றிய ஒரு வாசிப்பு - எல். வஸீம் அக்ரம்

70 வருடங்களுக்கு மேலாகத்  தமிழ்ப் பணியாற்றிவரும் கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள “ஈழத்துத் தமிழ் இலக்கியச் செல்நெறியும் பிரதேச இலக்கியங்களும் “ என்ற தலைப்பிலான இருநாள் ஆய்வரங்கு நேற்று (18)  கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ‘சங்கரப்பிள்ளை மண்டபத்தில் ’ஆரம்பமானது.
முதல்நாள் காலை நிகழ்ச்சியாக, வடமேல் , வடமத்திய பிரதேசத் தமிழ் இலக்கியங்கள் பற்றிய ஆய்வுகள்  ‘ உடப்பு  பெரி.சோமாஸ்கந்தர் அரங்கில் ‘  நடைபெற்றன.
இந்த ஆய்வரங்குக்கு  புத்தளத்தைச் சேர்ந்த கவிஞர் கலாபூஷணம் ஜவாத் மரைக்கார் தலைமை வகித்தார்.
பேராசிரியர் கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் (புத்தளம்)  ” அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்களின் இலக்கியப் பிரக்ஞையும் போக்குகளும் ”  என்ற தலைப்பிலும்
 உடப்பூர் வீரசொக்கன் ( புத்தளம் ) ” உடப்புப் பிராந்திய கூத்துக் கலையும் நாடக வளர்ச்சியும் அவற்றின் பின்புலமும் ” என்ற தலைப்பிலும்
எல். வஸீம் அக்ரம் (அனுராதபுரம்)   ” அனுராதபுரப் பிரதேசக் கவிதைகள் பற்றிய ஒரு வாசிப்பு ” என்ற தலைப்பிலும்  
கே.ஸ்ரீஸ்கந்தராஜா (புத்தளம்)  ” புத்தளம் , சிலாபம் பிரதேசத்தின் புனைகதை முயற்சிகள் – சில அவசரக் குறிப்புகள் ”  என்ற தலைப்பிலும் ஆய்வுரைகளை நிகழ்த்தினர்.
கவிஞர்கள் நாச்சியாதீவு பர்வீன் , மேமன்கவி ஆகியோர் இவ்வாய்வரங்கு தொடர்பாகக் கருத்துரை வழங்கினர்.

ஞாயிறு, 17 மார்ச், 2013

எனது உரிமம்


எனது உரிமம்

முகிழ்களாய் உடைந்து
மழையாய் கொட்டுகின்றது
மனசு

விஷம் அருந்திய போதையில்
சவர்க்கார கரைசல் நுரைகளை
வாய் உமிழ்ந்து கொண்டிருக்கின்றது

வியர்க்கின்றது என்னை அறியாத
ஒவ்வொரு புள்ளியிலுமான வேதைனச் சுமைகள்

காலம் பிந்திய உடைவுகள்
அறியக் கல்லரைகளின்
அவலப் பாதைகளுக்கு
வெளியாகின்றது

தும்பிக்கை வெட்டிய யானையின் மதம்
மதுவருந்திய பேயின் வெறி
இப்படியான மிருகத்தனங்களால்
நொருக்கப்படுவது
எனது உரிமம்

2013.03.07

வெள்ளி, 1 மார்ச், 2013

கவிதை

மீளழைத்தல்

வெள்ளைக் கனவுகளை துரத்திச் சென்று
திரும்பி பார்க்கின்ற போது
கறுத்தச் சிந்தனைகளை
களவெடுக்கின்றது
எனக்கு முந்திய ஒரு பூனை

நானோ எனது கனவுப் பைகளை
மீள அழைத்துக் கொண்டு
களைகிறேன்