எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 27 நவம்பர், 2012

வானொலி நாடகப் பயிற்சி நெறி

இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றின் வானொலி நாடகப் பயிற்சி நெறி  -

வானொலி ஊடான வாலுவாக்கம்

வானொலி ஊடான வாலுவாக்கம் : Radio for Advocacy

வானொலி நாடக பயிற்சிப் பட்டறை

-    எல். வஸீம் அக்ரம்


மிக துரித கெதியில் சமூக மாற்றத்திற்கு வழிகோலுகின்ற ஒரு ஊடகாமாக வானொலியை நாம் அடையாளம் காண இயலும். அதனை மனித வலுவாக்க ஊடகம் அல்லது சமூக வலுவாக்க ஊடகம் என்று வரையறை செய்யலாம். வானொலியை சர்வதேச பொது ஊடகம் (ருniஎநசளயட) என்று குறிப்பிடுவர். உலகத்திலே மிக கிரமமாக, விரைவாக நுகரப்படுகின்ற ஊடகம் வானொலி ஆகும். இவ்வானொலி ஊடாகத்தில் நாடகம் ஒரு முக்கிய கூறாக இருக்கின்றது.
நாடகம் என்பது ஒரு ஆளும் கலை என்று குறிப்பிடலாம். இதில் வானொலி நாடகம் செவிகளால் நுகரப்பட்டு காட்சிப் புலன்களை கண்ணால் பார்;க்கின்ற ஒலியின் கலை என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தக் கலை இன்று பல்கிப் பெருகியுள்ள வானொலி ஊடகத்தால் நுட்பமான தன்மைகள் கொண்டு ஒழுங்கமைக்கப்படுகின்றதா என்ற விமரிசனத்தை அடிக்கடி வாசிக்க முடிகின்றது. (இது தமிழில் குறிப்பாக முஸ்லிம் நிகழ்ச்சியில் ஏன் தூக்கப்பட்டது என்பதே இன்றுள்ள ஆர்வளர்களின் கேள்வியாகும்)
இவ்வாரான விமரிசனங்கள் முன் வானொலி நாடகத்திற்கான ஒரு முழுமையானதும் சர்வதேச தரமிக்கதுமான ஒரு பயிற்சிப்பட்டரையை அண்மையில் முஸ்லிம்களுக்கான செயலகம் (ளுகுஆ) இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர்கள் மன்றத்துடன் இணைந்து (ளுனுதுகு) நடத்தியது. இந்நிகழ்வுக்கான ஊடக அனுசரணையை விடிவெள்ளி வழங்கியிருந்தது.
வானொலி நாடகம் சுமார் 6 தசாப்தாகால வரலாற்றைக் கொண்டது. இது ஒலி அரங்கு, ஒலி உலகு, ஒலிப் புனைவு என்று பல்வேறு பெயர் கொண்டு அழைக்கப்டுகின்றது. இந்த வனொலி நாடகத்திற்கு இலங்கை (வானொலி) ஊடக வரலாற்றில் குறிப்பிடத்தக்க பக்கங்கள் இருக்கின்றன. அதிலும் விசேடமாக முஸ்லிம் வானொலி நாடகம் தமிழ் வானொலியை சர்வமயப்படுத்த பெரும் தூணாக இருந்துது. இந்தப் வரலாற்றுப் பக்கங்கள் கறுப்பு, வெள்ளை என்ற இரு நிறங்களாலும் நிர்வகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதே உண்மை.
இலங்கையில் வானொலி நாடகம் என்பது, மரபார்ந்த தன்மைகளால் ஒழுங்மைந்து ஒரு மைற்கல்லாக இருந்தும், அது தொடர்ச்சியான செயற்பாடின்றி இடையறுந்து எங்கோ தன்னைத் தேடும் ஒரு துறவியாக நிற்கின்றது. இந்தத் துறவியைக் கொண்டு விழுமியங்களையும் சமூக மாற்றத்தையும் நிறுவும் ஒரு முனைப்பையே முஸ்லிம் செயலகம் செயற்படுத்தியிருக்கின்றது அல்லது முயல்கின்றது.
இலங்கை முஸ்லிம்களின் இடப்பிரச்சினைகள், இருப்பு பிரச்சினைகள், இடப்பெயர்வு, சேரிவாழ்வு மற்றும் சமூக சகவாழ்வு என்பனவற்றினை தேடும் அலவுகோளுடன் முஸ்லிம் செயலகம், இலங்கை அபிவிருத்திக்கான ஊடக மன்றத்துடன் இணைந்து மேற்படி வானொலி நாடகப் பயிற்சியினை கண்டியில் தொடர்ச்சியாக மூன்று வாரங்களாக வார இறுதி நாட்களில் நடத்தியிருந்தது.
இப்பயிற்;;சிப் பட்டறையில் பல்கலைக்கழக மாணவர்கள், இளம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் என்று சுமார் 25பேர் கலந்து கொண்டதுடன், பயிற்சி முடிவில் சுமார் 15 முழுமையான நாடகப் பிரதிகள் வரையப்பட்டுள்ளன. நாடகம் என்ற ஒரு இலக்கிய யதார்த்த வடிவம் பற்றி ஆகக் குறைந்த அறிவுள்ளவர்களே இதில் கலந்து கொண்டனர். இவர்களின் தொடர்ச்சியான ஈடுபாடு, ஏற்பாட்டாளர்களின் முழுiயான ஒழுங்கமைப்பு மற்றும் பயிற்சியாளர் (வுசயiநெச) எம்.சீ.ரஸ்மின் அளவிடமுடியாத (சர்வதேச) பயிற்சிகள் என்பனவற்றின் பெறுபேறே இந்த 15 நாடகப் பிரதிகளாகும்.
மாற்றம் என்பது உறுதியானது. நான் மாற்றத்தை நம்புகிறேன் என்ற விஞ்ஞான பூர்வமான அணுகுமுறைகள், இட்சியத்துடன் இந்த பயிற்சிகள் வெற்றிபெற வழிசமைத்தது. இலங்கையில் வானொலி நாடகம் என்ற துறை மரணத்திலிருந்து மீண்டு பீனிக்ஸ் பறவையாக வேண்டும் என்பது இதன் இன்னொரு செய்தியாகும். அதற்கு உயிர்கொடுக்க கடைசியில் விஞ்சிப்போனது விரல் விட்டெண்ணத்தக்கவர்கள் மட்டுந்தான்.
நாடகம் என்பது ஒரு கலை என்ற மேலெழுந்தவாரியான வாசிப்பை உடைத்து அதற்குள் விஞ்ஞான முறையினை ஆட்படுத்தி அதன் புனைவினை மரபார்ந்த தன்மைகள் மற்றும் விதிகளில் இருந்து நெகிழ்த்தி, எளிய முறையிலான வடிவங்கள் ஊடாக இலங்கையில் எந்த ஒருவரும் வானொலி நாடகத்தினை எழுதலாம் என்ற ஒரு திருப்பத்தை இந்த வானொலி நாடகப் பயிற்சி வழங்கியிருந்தது.
வானொலி நாடகம் என்ற ஒன்றை ஒரு கலையாக பாரத்தலின்றி அது ஒரு விஞ்ஞானக் கலை என்று நோக்குமளவிற்கு அது வளர்ந்துள்ளது என்பதை கற்றுக் கொள்ள இயல்ந்தது. வானொலி நாடகத்தினை பெரும்பாலானவர்கள் புனைவு வடிவமாகவும் சினிமா என்றும் கருதியிருந்த பிரக்ஞையை மறுதலித்து அது யதார்த்தங்கள் ஊடறுக்கும் ஒலி - ஒளி என்று நிறுவியிருந்தது.
இலங்கையில் வானொலி நாடகம் என்ற பிரதி வடிவ முயற்சி மற்றும் செயற்பொறிமுறை வரன்ட நிலமாக காட்சி தந்து கொண்டிருந்த போதே இந்த வானொலி நாடகப் பயிற்சி நெறி நடாத்தப்பட்டமை, பாலைவனத்தில் பெய்த மழையாக இருக்கின்றது.
இந்நிகழ்வில் துணை வளவாளர்களாக அஷ்ரப் சிஹாப்தீன் மற்றும் புர்கான் பீவி ஆகிய வானொலி நாடக நடிகர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் வானொலி நாடகத்தின் அடிப்படைத் தன்மைகள் மற்றும் தங்கள் அநுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
தவிரவும் ருளு யனை நிறுவனத்தின் இணைப்பாளர் அபுல் கலாம் முஸ்லிம் செயலகத்திற்கான இணைப்பாளர்கள் என்போரும் ளுனுதுகு இன் நிகழ்ச்சித்திட்ட உத்தியோத்தர் அஸ்ஜைன் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் வனொலி நாடகம் குறிப்பாக முஸ்லிம் வானொலி நாடகம் சமூகத்தின் பிரச்சினைகளை மிகத் துல்லியமாக அடையாளப்படுத்தத் துணிந்ததுடன், சமூக எதிர்பார்க்கையை வானொலி நாடகத்தின் ஊடகா எவ்வாறு காட்டுவது, அது சமூகத்தின் எவ்வாறான பிரதிபலிப்புக்களை வெளிப்படுத்துவது என்ற வௌ;வேறான கட்டங்களை தாங்கியிருந்தது.
வானொலி நாடகப் பயிற்சிப் பட்டறை என்று பார்க்கின்றபோது அது மரபார்ந்த ஊடகத்தை மட்டும் மையப்படுத்தியது என்ற வரம்பையும் தாண்டி, இது நவீன செல்நெறியின் குழந்தை, சர்வதேசம் முழுவதும் பின்தங்கிய மக்களது வாழ்வாதரத்தை கட்டியெழுப்புகின்ற ஒரு கருவி என்ற வியாக்கியானத்தை விதைத்தது. ஒரு உரையாடலாக அல்லது சினிமாவாக இந்த பயிற்சிப்பட்டறை இருக்காமல் அறிவுசார்ந்த சமூகத்தின் மீதான பாய்ச்சலை காட்டியது. நேரத்தின் மீதான காதலை தூண்டியிருந்தது.
இலங்கையில் வானொலி நாடகம் என்ற வரலாற்றிற்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்த எந்தியிருக்கின்றது. புதிய தலைமுறையினரின் பங்குபற்றலின்மை என்ற குறையை அல்லது இடைவெளியை நிரப்பி, வானொலி நாடகங்களை தொடர்ச்சியாக எழுதக்கூடிய ஒரு புதிய தலைமுறையை வெளிச்சம் போட்டிருக்கின்றது. இந்த வெளிச்சம் நிரந்தர வெளிச்சமாக மாறவேண்டும். அதற்கான களங்கள் உருவாக வேண்டும் என்பதே எமது அவா. வெற்றிச் சான்றிதழ்களுடன் காலங்கள் ஒழுகிவிடாது, சமூகத்தில் துவாரம் விழுந்துள்ள இடங்கள் மீது ஆக்கிரமிக்கின்ற ஒரு வீரியத்தை இந்த தலைமுறை வானொலி நாடகப் பயிலுனர்கள் பெற்றிருப்பர் என்பது காலத்தின் முன் அளிக்கப்படவுள்ள ஆற்றுகையாக பார்க்கலாம். 



திங்கள், 12 நவம்பர், 2012

வஸீ்ம் அக்ரம் கவிதைகள் மூன்று

1. மறக்க முடியாத காலைப் பொழுது
மரபுகளின் மாறிலியாய்
துயர நொடிகளை கடந்து
எனது விடியலின் நிறப் பொலிவை
உறங்கச் செய்கின்ற
எனது மறக்க முடியாத காலை, அது
எனக்குள் ஒளிர்ந்து இசைக்கின்ற பொழுதை
கொளித்தி அந்த உஷ்ணச் சுவையை
உண்டு மகிழ்ந்தது, அந்தக் காலை
என்னை அவிழ்த்துப் போட்டு
ஓடத்துவங்கினேன்
இறந்தவனின் பேய்க் காற்று
பைத்தியக்காரனின் உலரல்
என் மீது நிரம்பிப் பாய்ந்தது
வாழ்வின் இறுதிக் காட்சிகளுக்குள் ஓடியது
அந்த மறக்க முடியாத காலை
அது வசந்த விருட்சங்களுக்கு தீ மூட்டியது
என் புதிய காணங்களையும்
என் புதிய கனாக்களையும்
காற்றிடமிருந்து மீட்டெடுத்தேன்
எனது துக்கத்தின் தூதை காற்றில்
சிறகு உடைந்த பறவையாக்கி பறக்க விடுகிறேன்
அது தவழ்ந்து தவழ்ந்து பறத்தலுக்காய் போராடியது
எனது ஆத்மத்தை சுவரில் அறைகிறேன்
காலை எனக்கு கொடுரமான
செய்தியைக் கொண்டு வந்தது
அது வாழ்வில் மறக்க முடியாதது காலை

2. ஒக்டோபர் கறுப்பு

இரு தசாப்த
வரலாற்று வரைபடமிது
சற்று இழிவான பொழுதுகளிலே விழிக்கின்றோம்
இரவு புடைத்து தொங்கிய வானில்
ஒரு நட்சத்திரமாவது இருக்கவில்லை.
ஊனக் கண்களின் நட்சத்திரக் கனவுகள்
எங்கள் முகாம்ங்களைப் போல்
இருள் கவ்விக் கிடந்தன
வாழ்வின் எல்லா சுற்றுக்களுமாய்
நடந்த தடங்கள் மட்டும் மாறியிருக்க
கால் தடையம் அப்படியே
காயச் சுமைகளாக
காலத்தை கசக்கி எரிகின்றது

3. வசந்தம் விரியும் வரை
எனது தே(ந)சத்தின் கதவுகளை தட்டுகிறேன்
என்னோடு இருக்கின்ற இரகசியங்களை அழைத்துக் கொண்டு
கைவிடப்பட்ட எனது நிலத்தின் மீது
நே(த)சக் கரங்களை நீட்டுகிறேன்
நூற்றாண்டாய்ப் புதையுண்டு போன நிலத்தில்
இரத்த உறவுகளின் நேசங்களை
போரின் பிந்திய இழப்புக்களை
பரிவர்த்தணை செய்து
அழுகின்றது எனது ஆத்மா
மணல்ச் சாரல் வீசிக் கொண்டிருக்கின்றது
துர் நாற்றக் கட்டிலில்
புழுதிப் படுக்கையை விரித்து
ஒரு சொறி நாயுடன்
உறங்கிய இந்த இரவுகளை
எண்ணியே பித்தம் கசிகின்றது எனக்கு
இன்னும்
சிறு கற்கள் கொண்டு நிரப்பி
புதிய நாளுக்கான வார்ப்புகளை
கெஞ்சுகின்றது
நம்பிக்கை இழந்து
துயர் பச்சை கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கின்றது
இனியாவது
வசந்த பூபாளக் காற்று வீசி
என் காலத்தில் காய்கின்ற
உலர்ந்த நாட் துணிகளை
உலர்த்திவிட்டு
வசந்த பூக்களுக்கு உரமூட்டுகின்றதா?